புதன், 13 மே, 2009

இன்று என் தொகுதியில் வாக்கு பதிவு



இன்று என் தொகுதியில் வாக்கு பதிவு நான் என்னுடைய வாக்கை ஒரு கட்சியின் சின்னத்திற்க்கு கொடுத்தேன். நான் எதற்காக அந்த சின்னத்திற்க்கு வாக்களித்தேன். அந்த MP
வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவா ? இல்லை.

பின்னர் எதற்காக ?

அந்த கட்சியில் நான் உறுப்பினரோ , தொண்டனோ அல்ல.

பின்னர் எதற்காக ?

இந்த கட்சி அதரிக்கும் கட்சியின் அட்சி திறமை காரணமா ?

இல்லை...

பின்னர் எதற்காக ?

எம் சகோதரர்களின் ரத்தம் இந்த மண்ணில் மீண்டும் சிந்தக்கூடாது என்பதற்காக...


மீண்டும் ஒரு 5 ஆண்டுகள் அவர்கள் அமைதியாக இறுக்க வேண்டும் என்பதற்காக....


என் கையில் இடப்பட்ட ஒரு சொட்டு மையினால் என் சகோதரன் சிந்த இருந்த ஒரு சொட்டு இரத்தத்தை தடுத்து நிறுத்த போகிறோம் என்பதற்காக......